Logo

இருப்பிட்டி ஐங்கரன்
சனசமூக நிலையம்

Irupitti Aingaran
Community Center

நிகழ்வுகள்

மீண்டும் செல்க
Main Photo

நிகழ்வு குறித்த விவரங்கள்

வணக்கம் உறவுகளே! வேலணை பிரதேச சபையினரின் அறிவுறுத்தலுக்கமைவாக புங்குடுதீவு இறுப்பிட்டி ஐங்கரன் சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகசபையினை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் 28/02/2026 அன்று கூடியது. கௌரவ தவிசாளர் சி.அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ உபதவிசாளர் க.வசந்தகுமாரன் , கௌரவ உறுப்பினர் திரு .சஞ்சீவ் , சனசமூக நிலையங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர் திருமதி .ராகவன் சயுந்தினி மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு புதிய நிர்வாக சபை தெரிவு நடைபெற்றது. இதன் பிரகாரம் தலைவராக : வி.விஜயகாந்த் உப தலைவராக: ப .பத்மகுமார்(நந்தன்) செயலாளராக: வே.பார்த்தீபன் உப செயளாராக: திருமதி.கஜேந்திரன் கார்த்திகா பொருளாளராக: நா.சுகதீபன் கணக்காய்வாளராக: புனிதப்பிரகாஸ் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்களாக கு.திலீப்குமார் சிவநேசன் கேதீஸ்வரன் திருமதி.ப.ராணி நா.சுகராஜ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். அன்பார்ந்த எமது கிராமத்து உறவுகளே நிலையத்தின் வளர்ச்சிக்கு ஆக்கமும்,ஊக்கமும் தந்து உங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்கிட எல்லாம் வல்ல எம்பெருமான் புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் பாதம் பணிந்து வேண்டுகிறோம். நன்றிகள்.

தேதி: 2026-02-28 இடம்: ஐங்கரன் சனசமூக நிலையம்
ஏனைய தொகுப்புகள்
முழுத் தொகுப்பு

எமது சனசமூக நிலையத்தின் அனைத்து வரலாற்று மற்றும் கலாச்சார நிகழ்வுகளையும் எமது பிரதான கேலரி பக்கத்தில் காணலாம்.

View Full Gallery